October 22, 2021 Friday 05.12 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 21 2020 1:14 AM

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் : இனி தேர்வு எழுதி ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் !

Posted Date : Oct 21 2020 1:14 AM

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது கட்டாயம்.

ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்புக் கோரி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை