December 06, 2020 Sunday 07.27 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 21 2020 6:03 AM

எல்லை மீறி வந்த சீன வீரர் - விசாரணைக்குப் பின் சீனாவிடம் ஒப்படைப்பு !

Posted Date : Oct 21 2020 6:03 AM

இந்தியா சீனா எல்லை பிராந்தியமான லடாக்கில் கடந்த ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இரு நாட்டு ராணுவத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்திய எல்லையான சும்மார்-டெம்சோக் என்ற பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் வழி தவறி நுழைந்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த இந்திய ராணுவத்தினர் அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா அல்லது உளவு பார்க்க வந்தாரா என்பது தொடர்பாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசாரணையில் அவர் மீது தவறு இல்லை என்று தெரியவந்தால், ராணுவ நடைமுறையைப் பின்பற்றி அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய சீன வீரரிடம் வழக்கமான நடைமுறைகளை முடித்த பின்னர் நேற்று இரவு சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை