December 06, 2020 Sunday 06.25 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 21 2020 10:53 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரமே தீபாவளி : மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி !

Posted Date : Oct 21 2020 10:53 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணமாக கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி , சம்பளம் என எல்லாவாற்றிலும் கை வைத்தது மத்திய அரசு . தனியார் நிறுவனங்களில் பலர் வேலை இழந்து தவிக்கின்றனர் . இந்நிலையில் தான் , அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக, தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த போனஸ், வரும் விஜயதசமிக்கு முன் ஒரே தவணையாக, நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து, பொருட்களுக்களுக்கான தேவை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை