December 06, 2020 Sunday 06.44 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 22 2020 5:31 AM

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையா ? விசாரணையில் சைபர் கிரைம்

Posted Date : Oct 22 2020 5:31 AM

நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வாழ்க்கையை குறிக்கும் 800 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், கண்டங்கள் தெரிவித்தனர். அத்துடன், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாகும் டிரெண்டானது. அதன் பின் முத்தையா முரளிதரனின் கோரிக்கையை ஏற்று விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், விலகியது குறித்து பலரும் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வந்தனர். அதில், ரித்விக் என்ற ஐடியில் இருந்து நபர் ஒருவர், விஜய்சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் அருவருப்பான வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இது குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அதில், மிரட்டல் விடுத்த ஐடி இலங்கையில் இருந்து இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

எனவே, இலங்கையில் விசாரணை நடத்துவதற்காக இண்டர்போலின் உதவியை நாடும் முயற்சியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு முறைப்படியாக கடிதத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை