November 27, 2020 Friday 07.53 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 23 2020 9:13 AM

கபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

Posted Date : Oct 23 2020 9:13 AM

இந்திய முன்னாள் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயது கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார்.

இந்நிலையில் கபில் தேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை