December 06, 2020 Sunday 06.59 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 29 2020 4:30 AM

ஒரே நாளில் தண்ணீரில் மிதந்த சென்னை : தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் !

Posted Date : Oct 29 2020 4:30 AM

தமிழகத்திற்கு அடுத்த 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழை காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இதேபோல் பாலவாக்கத்தில் 14.8 செ.மீ., பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ., மழைப் பாதிவாகியுள்ளது. 2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.

இதையடுத்து சென்னை எழும்பூரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வட கடலோர மாவங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், சென்னையின் மீது எவ்வாறு மேகமூட்டம் இருந்தது என்பது பற்றிய ஒரு செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா நகர் ஏரியாவின் மேற்பரப்பில் சிவப்பு வண்ணத்தில் மேகங்கள் குறிக்கப்பட்டிருந்தது. 

இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று கூறுகிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை