December 06, 2020 Sunday 07.19 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 29 2020 5:00 AM

அரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் !

Posted Date : Oct 29 2020 5:00 AM

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் கிட்டத்தட்ட அரைஇறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்தது மும்பை .லீக் சுற்றில் இன்னும் எட்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது . சென்னை அணி மட்டுமே அரைஇறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஆதலால் , 6 அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது !

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை ராயல் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பெங்களூர் அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர். தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். 18 ரன்களுடன்  டிகாக்கும், 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். திவாரி 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த குர்னால் பாண்டியா 10 ரன்னிலும் ஹர்திக் பாண்டியா 17 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த மோதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 ல் முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை உறுதி செய்தது மும்பை . இனி மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து குவாலிபையர் 1 ல் விளையாடும் வாய்ப்பை மும்பை அணி பெறும் 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை