December 06, 2020 Sunday 06.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 29 2020 11:38 AM

அரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா ? நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு !

Posted Date : Oct 29 2020 11:38 AM

கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யு.ஜி.சி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்ததால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது .

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை, கட்டாயமாக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கல்லூரிகள் வேண்டுமானால் கால அவகாசம் கோரலாம் என்றும் யுஜிசி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த விவரமும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அரியர் தேர்ச்சி விவகாரம் குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யுஜிசிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை மற்றும் யுஜிசி வரும் நவ.20ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்னர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை