January 24, 2021 Sunday 10.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 18 2020 9:56 AM

” லவ் ஜிகாத் ” - பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் ! சட்டத்தின் நோக்கம் என்ன ?

Posted Date : Nov 18 2020 9:56 AM

லவ் ஜிகாத் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்தியாவில் சட்டப்பிரிவு 21 படி, ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் நபர்களை திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு.

இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் லவ் ஜிகாத் சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது வரை 'லவ் ஜிகாத்' என்ற சொல் இந்திய சட்ட அமைப்பில் கிடையாது.

இந்து பெண்களை, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி சங் பரிவார் கொண்டு வந்த சொல்லே "லவ் ஜிகாத்".இதே சட்டத்தை பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஜாமினில் வெளிவர முடியாத சட்டமாக இது அமையும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மிஸ்ரா தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், மதம் மாற்றி நடைபெறும் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே, மாவட்ட ஆட்சியருக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி இதில் கொண்டு வரப்படுகிறது.

"கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, அல்லது ஆசை வார்த்தைகள் கூறி நடைபெறும் மதம் மாற்று திருமணங்களை செல்லாது என்ற சட்ட விதி இருக்கும். இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும்" என்று ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும், லவ் ஜிகாதுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைப்பு காட்டினார்."காதல் மற்றும் பணம் என்ற பெயரில் பெண்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். சரியான ஆய்வுக்குபின், இது தொடர்பான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசினார்..

 கேரள மாநில ஹதியா வழக்கு

 மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஹதியா, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே செய்ததாக தெரிவித்தும் கேரள உயர்நீதிமன்றம் அவர்கள் திருமணத்தை ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை