January 24, 2021 Sunday 11.49 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 19 2020 6:02 AM

பயணிகளிடம் வரவேற்பு இல்லை - சேவையை நிறுத்தும் சதாப்தி விரைவு ரயில் !

Posted Date : Nov 19 2020 6:02 AM

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டு போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கி வருகின்றன. ஏற்கனவே பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தளர்வுகள் அளிக்கப்பட்டபோது தமிழக மாவட்டங்களுக்குள் பயணிகள் ரயில்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட வழிதடங்களில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அதில், சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயிலும் ஒன்று.

சேவை நிறுத்தம் :

தென்னக ரயில்வே சென்னை முதல் கோயம்புத்தூர் வரை சதாப்தி சிறப்பு ரயில் சேவையை நடத்தி வருகிறது. இந்த சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் நடைபெற்று வருகிறது. இந்த ரயில் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி தென்னக ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 'ரயில் எண் 06027/06028 சென்னை சென்டிரல் - கோவை  வாரத்துக்கு 6 நாட்கள் இயங்கும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை அதிகம் பேர் பயன்படுத்தாததால் நிறுத்தப்படுகிறது.இந்த ரயில் சேவை இரு புறங்களிலும் இருந்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் சேவை இறுதியாக நவம்பர் 30 அன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை