January 16, 2021 Saturday 05.46 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 20 2020 4:39 AM

லஞ்சம் வாங்கும் புழக்கம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ?

Posted Date : Nov 20 2020 4:39 AM

உலகம் முழுவதும் தொழில் புரிபவர்களுக்கு பெரும் நெருக்கடியை தருவது அந்த நாட்டில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் தான் . இந்நிலையில் டிரேஸ் வெளிட்டுள்ள பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம் கிடைத்துள்ளது .

ஒரு இடம் முன்னேறிய இந்தியா :

லஞ்சத்துக்கு எதிரான சா்வதேச அமைப்பான 'டிரேஸ்', 194 நாடுகளில் காணப்படும் லஞ்ச அபாயம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அதில் 45 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, 77-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டுக்கான பட்டியலில் 48 புள்ளிகளுடன் 78-ஆவது இடத்தை இந்தியா பிடித்திருந்தது. இந்தக் குறியீட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்தியாவை விடப் பின்தங்கியே உள்ளன.அதாவது இந்தியாவை காட்டிலும் லஞ்சம் அதிகமாக இந்த நாடுகளில் புழக்கத்தில் உள்ளது . மற்றோா் அண்டை நாடான பூடான் 48-ஆவது இடத்தில் உள்ளது.

லஞ்சம் குறைவாக காணப்படும் நாடுகள் :

இந்தப் பட்டியலில் டென்மாா்க், நாா்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அந்நாடுகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறைவாக உள்ளது. வட கொரியா, துா்க்மெனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியல் சா்வதேச தொழில் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை வகுப்பதற்கு உதவும் என்று டிரேஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை