December 06, 2020 Sunday 07.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 21 2020 5:54 AM

ஹெல்மெட் இல்லாம பயணமா ? அப்ப லைசன்ஸ் ரத்து ! - புதிய சட்டம் இயற்றும் ஒடிசா

Posted Date : Nov 21 2020 5:54 AM

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் சட்டத்தை மீறி தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதற்கு மாநில அரசு எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொதுமக்களில் சிலர் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா கூறுகையில், "

ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கடினமான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

கடந்த 2019 ம் ஆண்டு மட்டும் , 11064 வாகன விபத்துகள் நடைப்பெற்றுள்ளது .இதில் 4688 இரு சக்கர வாகனங்களின் விபத்துகளும் அடங்கும் . இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 2398 ஆகும் .இதில் தலைகவசம் பயன்படுத்தாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2156 . 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை