December 06, 2020 Sunday 06.09 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 21 2020 6:11 AM

இன்று பாஜகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி?

Posted Date : Nov 21 2020 6:11 AM

நடிகை கஸ்தூரி மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி பரவிய நிலையில் அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

சமூக கருத்துகளை அவ்வப்போது அள்ளித் தெளித்து வருபவர் நடிகை கஸ்தூரி. நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்களை இணைத்துக் கொள்ளும் கட்சி பாஜக. பல நடிகர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.


 
இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர உள்ள நிலையில் கணிசமான அளவுக்கு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் பாஜகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒருவர் தனக்கு போன் செய்து, தான் பாஜகவில் இணைய இருப்பதாக தனக்கே சொல்வதாக பதிவிட்டுள்ளார்.


இது உண்மையை விட வதந்தி வேகமாக பரவுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் என அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மாலைப் பொழுது முருகனுடன் கழிவதாக பதிவிட்டுள்ள அவர், தமிழக பாஜக தலைவர் முருகன் அல்ல, கடவுள் முருகன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை