December 06, 2020 Sunday 06.32 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 21 2020 6:37 AM

யானைகளின் பாதுகாவலன் அஜய் தேசாய் மறைந்தார் - ஸ்டாலின் இரங்கல் !

Posted Date : Nov 21 2020 6:37 AM

ஆசிய யானைகளை அழிவில் இருந்து மீட்க தன் வாழ்நாளில் பல நாட்களை செலவழித்த அஜய் தேசாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் . அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் யானை ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் அஜய் தேசாய். கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சேர்ந்த இவர் தொடர்ந்து தனது வாழ்நாளில் பல வருடங்களில் யானைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தவர். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் மூலம் தனது ஆய்வைத் தொடங்கிய இவர் 80களில் முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் யானைகளின் வாழ்க்கை முறை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார்.

1985 ஆம் ஆண்டு யானைகளின் இடப்பெயர்ச்சியை ரேடியோ காலர் மூலம் கண்டறிந்தவர் இவர் தான்.

 

உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகர், ஆசிய யானைகள் தொடர்பான மத்திய அரசின் சிறப்பு குழு உறுப்பினர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அத்துடன் அழிந்து வரும் ஆசிய யானைகள் என்ற தலைப்பில் இவர் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். தொடர்ந்து யானைகளின் வாழ்க்கையை அறிய தனது வாழ்நாளில் பெரும் பங்கை செலவிட்ட அஜய் தேசாய் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், யானை மனிதன் அஜய்தேசாய் காலமான செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இன்று அதன் முன்னணி வனவிலங்கு பாதுகாப்பாளர்களில் ஒருவரை இழந்துள்ளது மற்றும் உலகின் யானைகள் தங்கள் மிகப்பெரிய சாம்பியனை இழந்துள்ளன. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை