January 24, 2021 Sunday 11.51 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 26 2020 12:28 PM

அதற்குள் அடுத்த புயலா ? சென்னை மக்களே உஷார் - வானிலை மையம் எச்சரிக்கை !

Posted Date : Nov 26 2020 12:28 PM

தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை:

நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. வரும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பலத்த பாதிப்புகள் இல்லாமல் தமிழகமும் , புதுச்சேரியும் தப்பியது .

தெற்கு வங்க கடலில் புதிய புயல் :

இந்நிலையில் , வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது.  தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை