January 16, 2021 Saturday 05.36 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 27 2020 5:42 AM

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எந்த மாவட்டங்களைப் பாதிக்கும்?

Posted Date : Nov 27 2020 5:42 AM

நிவர் புயலைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல், 25 நள்ளிரவு கரையைக் கடந்தது. அதன்பின், நிவர் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கர்நாடகத்தை நோக்கிச் சென்று விடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக 27-ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 29-ம் தேதி வரை மழை தொடரும் என்றும், சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அது வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தென் தமிழகம் நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை