#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது .
சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்நிலையில் ஏழாவது ஓவரின்போது இரு போராட்டக்காரர்கள் சிட்னி மைதானத்துக்குள் நுழைந்தார்கள். அவர்கள் கையில் இந்தியத் தொழிலதிபர் அதானிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் இருந்தன. இதன்பிறகு பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியே கொண்டு சென்றார்கள். இச்சம்பவத்தால் கிரிக்கெட் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான போராட்டம் :
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நிலக்கரிச் சுரங்கம் கட்டுமானத்தை மேற்கொள்ள அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த அனுமதிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நிலக்கரி சுரங்கத்தால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் எனப் புகார் தெரிவித்துள்ளார்கள். பொது இடங்களில் பதாகைகளுடன் நின்று அதானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். சிட்னி நகரில் ஏற்கெனவே அதானிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் மற்றொரு முயற்சியாக, இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டம் நடைபெறும் சிட்னி மைதானத்துக்குள் இரு போராட்டக்காரர்கள் நுழைந்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 1 பில்லியன் டாலரைக் கடனாக வழங்குவதற்கு ஸ்டாப் அதானி என்கிற ஆஸ்திரேலியப் போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிட்னி மைதானத்துக்குள் நுழைந்த இரு போராட்டக்காரர்களும் அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கக் கூடாது என்கிற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை