#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
பிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் -2020 என்கிற பட்டியலை வெளியிட்டது . 2020 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சார்ந்த 4 பெண்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்
1. பில்கிஸ் பானோ
டெல்லியில் ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது .குளிர்காலத்தையும் பொருட்படுத்தாது 82 வயதான தாடி பில்கிஸ் பானோ போராட்டத்தில் பங்கேற்றார்.போராட்டக்காரர்களில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாகவும் திகழ்ந்தார் .தினமும் காலை 8 மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியேறி நள்ளிரவு வரை போராட்டத்தில் அமர்ந்திருப்பார். அவரது பெயர் TIME பத்திரிகையின் ‘100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்’ இல் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது
2.இசைவாணி
பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (Casteless Collective) இசைக்குழுவின் பாடகியாக செயல்படுபவர் .கானா பாடல்கள் என்றால் ஆண்கள் மட்டுமே பாடுகிறவர்கள் என்பதை உடைத்து தன் முத்திரை பதித்தார் .கானா பாடல் மூலமாக சமூகக்கருத்துக்களை மேடைகளில் தன் குழுவுடன் பாடி வருகிறார் .இசைவாணியின் வெற்றி மற்ற இளம் பெண் கானா பாடகர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது
3. மனசி ஜோஷி
இந்திய பாரா விளையாட்டு வீரர் மற்றும் தற்போதைய பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன் ஆவார். டைம் இதழால் ஜோஷி "அடுத்த தலைமுறை தலைவராக" பட்டியலில் இடம்பெற்றார்.உடல் ஊனமுற்றோர் மற்றும் பாரா-ஸ்போர்ட்ஸ் பற்றிய கருத்தை மாற்றுவது குறித்து ஜோஷி குரல் கொடுத்து வருகிறார்.
4.ரிதிமா பாண்டே
இந்தியாவைச் சார்ந்த மிக இளம் வயது சுற்றுசுழல் ஆர்வலர் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுபவர்.தனது ஒன்பது வயதில், பாண்டே பருவநிலையை பாதுகாக்க இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைக் கேள்விக்குட்படுத்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.2019-ல், பாண்டே 15 பேருடன் இணைந்து ஐந்து நாடுகளுக்கு எதிராக ஐ.நாவில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த ஐந்து நாடுகளும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை புறக்கணித்த நாடாகும்
உலகின் சிறந்த 100 பெண்கள் என்கிற பட்டியலை 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை