August 02, 2021 Monday 04.53 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 25 2018 8:37 AM

பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்!

Posted Date : Oct 25 2018 8:37 AM

தற்சமயத்தில் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகின்றது காய்ச்சல். மக்களும் நிதம் எதிர்கொண்டுவந்த சாதாரண காய்ச்சலாகவே எண்ணி வருகின்றனர். ஆனால் உண்மை நிலவரப்படி சாதாரணமான காய்ச்சல் இப்பொழுது பரவவில்லை.

பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா , டெங்கு போன்ற வகையறாக்களே பரவி வருகின்றன. எவற்றையும் முன்னறிந்து செயல்படுவது தகுந்த ஒன்றாக இருக்கும்.

அப்படி வருகின்ற காய்ச்சலை அடையாளம் கண்டு, குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

* தொடர்ச்சியாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டையில் புண், இருமல், பசியின்மை, சோம்பல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளாகும்.


பன்றிக் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில முன்னச்சரிக்கை வழிகளைப் பின்பற்றுவது நல்லது.

பன்றிக்காயச்சல் ஏற்படக் காரணமான ஃபுளூ வைரஸ் உள்ள எதையேனும் தொட்டால் வைரஸ் தொற்று நமக்கும்  உண்டாகிறது. இந்தக் காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ தும்மினாலோ தெறிக்கும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கும் எளிமையாக பரவுகிறது.

ஆஸ்த்மா உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கும் குறைவானவர்கள், நாள்பட்ட நுரையீரல், இதயம், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் போன்றவர்கள்  இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

பன்றிக்காய்ச்சலிருந்து மட்டுமல்ல எவ்வகை காய்ச்சலிலிருந்தும் தற்காத்துக் கொள்ள பின்வரும் அத்தனை குறிப்புகளும் உதவக்கூடியவையே :

* கைகளைக் கழுவும் பொழுது விரலிடுக்குகளிலும் நன்றாக சோப்பு போட்டு தேய்த்து கழுவும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும். 

* தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளுதல் வேண்டும். 

* நல்ல தூக்கத்தை பின்பற்றி வர வேண்டும். 

* நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு தண்ணீரும் மற்றும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

* பன்றிக்காயச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளியிடஙகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிறரைத் தொடுவதையும் முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். 

* காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளக் கூடாது

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை