#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைகவசங்களின் தர கட்டுப்பாடு உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்த தலைகவசங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards) கட்டாய சான்றிதழின் கீழ் சேர்க்கப்பட்டு, தரகட்டுப்பாடு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற குழு உத்தரவுப்படி, இந்திய பருவநிலைக்கு ஏற்ப இலகு ரக தலைகவசத்தை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எய்ம்ஸ் மருத்துவர்கள், பிஎஸ் அமைப்பின் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர். விரிவான ஆய்வுக்குப்பின் எடை குறைவான மற்றும் தரமான தலைகவசங்கள் பற்றிய அறிக்கையை பரிந்துரை செய்தது. இந்த அறிக்கையை சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
குழுவின் பரிந்துரைப்படி, எடை குறைவான தலைக் கவசங்களை தயாரிக்க, சில விவரக் குறிப்புகளை மாற்றியமைத்துள்ளது. இதன்படி எடைகுறைவான தலைகவசங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. இது இந்திய சந்தையில் நல்ல போட்டியை ஏற்படுத்தும் மற்றும் தரமான எடைகுறைவான தலைக்கவசங்கள் தேவைக்கு உதவும்.இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தலைகவசங்களின் இந்த தரக்கட்டுப்பாடு உத்தரவு மூலம், இனி பிஎஸ் (BIS Certified Helmet) சான்றிதழ் அளிக்கப்பட்ட தலைக்கவசங்கள் மட்டும் நாட்டில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் தரமற்ற தலைக்கவசங்கள் விற்பனை தவிர்க்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும் அதிகரிக்கும்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை