January 24, 2021 Sunday 11.11 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 3 2020 6:19 AM

மஹாராஷ்டிரா : ஜாதி அடிப்படையிலான குடியிருப்புபகுதி பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் !

Posted Date : Dec 3 2020 6:19 AM

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்ப்பது , தன் பகுதி , ஊர்களுக்கு சமூகத்தின் பெயரை சூட்டும் பழக்கம் மிகக் குறைவு . சாதியினால் நடத்தப்படும் தீண்டாமை ஒழிப்பில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகவே இருக்கிறது . இதனை பின் தொடரும் வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .

மும்பை:

மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகத்தைக் கொண்டே குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் இருந்து வந்தன.

ஜாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு பகுதிகளின் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போது பீம் நகர், ஜோதி நகர் போன்ற புதிய பெயர்கள் சூட்டப்படவுள்ளன.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு ஜாதி பெயரை நீக்குவதற்கு மஹாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, கூறுகையில், 'இந்த முடிவு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ஜாதியினர் மத்தியிலும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும்,' என்றார். சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே தெரிவிக்கையில், 'இந்த புரட்சிகரமான முடிவு மக்களின் பார்வையை மாற்றும். ஜாதி முறையை படிப்படியாக ஒழிக்க வேண்டும். மதிப்புடன் வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது,' என்றார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை