January 24, 2021 Sunday 10.51 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 3 2020 9:46 AM

மதியம் வரை பாஜக : இப்போ ரஜினி கட்சி ! யார் இந்த அர்ஜுன மூர்த்தி ?

Posted Date : Dec 3 2020 9:46 AM

பாஜகவின் மாநிலப்பொறுப்பில் இருந்த அர்ஜூனமூர்த்தி ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .பாஜகவின் இன்னொரு அணி தான் ரஜினியின் கட்சி என இப்போதே நெட்டிசன்கள் பேசத் தொடங்கி விட்டனர் .

சென்னை : 

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். , 'ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரையும், கட்சி மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினி அறிமுகம் செய்தார்.

 

 

அர்ஜூன் மூர்த்தி, பாஜகவின் நிர்வாகியாக இருந்தவர். அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவியில் இருந்து வந்தார். வேல்யாத்திரையில் கலந்துகொண்டு கைதான பாஜகவின் நிர்வாகிகளில் இடம்பெற்றவர். இன்று அவருக்கு ரஜினி பதவி கொடுத்தவுடன் பலரும் அர்ஜூன் மூர்த்தியின் ட்விட்டர் கணக்கை பகிர்ந்து, அவர் பாஜக நிர்வாகி என பதிவிட்டனர்.

 

 

ஆனால் சற்று நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரத் தகவல் மாற்றப்பட்டது. அதில், Now with Thalaivar என மாற்றம் செய்துள்ளார். அவர் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைலில் மட்டும் தகவலை மாற்றியுள்ளார்.

 

 

இதனால் அவர் பாஜகவில் உள்ளாரா? அல்லது விலகிவிட்டார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை