January 16, 2021 Saturday 04.57 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 5 2020 4:57 AM

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ஜடேஜா விலகல் ! - இந்தியாவிற்கு பின்னடைவு

Posted Date : Dec 5 2020 4:57 AM

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்து வீழ்ந்தது.

இந்திய இன்னிங்ஸில் முக்கியமான தருணத்தில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்திய ஜடேஜா, கடைசி நேரத்தில் காயமடைந்தாா். அவருக்கான மாற்று ஆட்டக்காரராக இணைந்த யுவேந்திர சஹால் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் முக்கியமான  3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காயமடைந்த ஜடேஜா, டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.3-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் ஷர்துல் தாக்குர். இதையடுத்து மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை