October 22, 2021 Friday 06.44 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 13 2020 1:14 AM

1000 கோடியில் புதிய பாராளுமன்றம் : யாருக்காக பதில் சொல்லுங்க பிரதமரே - கமலஹாசன் !

Posted Date : Dec 13 2020 1:14 AM

சென்னை:

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் உள்ள தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.



பிரதமர் மோடியின் 'ஆத்மநிர்பார் பாரத்' எனும் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின்கீழ் இந்த புதிய கட்டுமானம் உருப்பெறவுள்ளது.சில தினங்களுக்கு முன்பாக கூட பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நட்டினார் .குடியரசுத் தலைவர் , எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பெரும்பாலான முக்கியத் தலைவர்களுக்கு அந்த விழாவில் அழைப்பு இல்லை என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது . நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படும்போது அப்போதைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், இதுகுறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது' கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மன்னர்கள்' மக்களைக் காக்கத்தான் சுவர் என்றார்கள் என அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை