December 03, 2021 Friday 09.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 13 2020 5:22 AM

பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த டிக்டாக் ” ரவுடிபேபி” காவல்துறையிடம் சிக்கியது எப்படி ?

Posted Date : Dec 13 2020 5:22 AM

சில தினங்களுக்கு முன் டிக்டாக் புகழ் ரவுடிபேபி சூர்யா உள்ளிட்ட 13 பெண்களும், 8 ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கையும் களவுமாக காவல்துறையினரால் பிடிபட்டனர்.தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

திருச்சியின் தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்பா சென்டர் பெயரில் போலியான மசாஜ் சென்டர்களை இயக்கி  பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் டிக்டாக் புகழ் ரவுடிபேபி சூர்யா உள்ளிட்ட 13 பெண்களும், 8 ஆண்களும் பிடிபட்டனர். பாதிக்கப்பட்ட 12 பெண்களை அரசு பெண்கள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலியல் தொழில் நடத்தி வந்ததாக  ரவுடிபேபி சூர்யா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் டிக்டாக் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. திருச்சி கே.கே. நகர் அமலாபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், டிவிஎஸ் டோல்கேட், சர்வீஸ் ரோட்டில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, புறப்பட்டுள்ளார். அப்போது, அவரை அணுகிய, தினேஷ் என்ற இளைஞர், ஸ்டேட் வங்கி மாடியில், சன் ஸ்பா சென்டர் உள்ளது. அங்கு ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது உண்மையா என பார்க்க சதீஷ் என்ற இளைஞரும், மாடிக்கு சென்றுள்ளார். அங்கு ரவுடி பேபி சூர்யா இருந்துள்ளார்.அவர் தான் இந்த ஸ்பா சென்டர் மேனேஜர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது, சூர்யாவோ, ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி, இரண்டு பெண்களை பெயர் சொல்லி அழைத்துள்ளார். அந்த 2 பெண்களும், தலையில் மல்லிகைப் பூ, உதட்டில் லிப்ஸ் டிக்,அரைகுறை ஆடையுடன் அங்கு வந்துள்ளனர். இந்த 2 பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

அப்போது, சதீஷ் தன்னிடம் பணம் குறைவாக உள்ளதால், எடுத்து வருகிறேன் என சொல்லி அங்கிருந்து புறப்பட்டு, காவல்நிலையத்தில் புகார் செய்ததாக, முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த மசாஜ் சென்டரில் சோதனை செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்களை மீட்டதோடு, தினேஷ், ரவுடி பேபி சூர்யா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது, immoral traffic prevention act 1956 இன் படி 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். தற்போது டிசம்பர் 9 ஆம் தேதி கைதான நபர்களில் சிலர் ஏற்கனவே அக்டோபர் மாதம் திருச்சியில் இதே போன்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை