December 03, 2021 Friday 09.37 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : Dec 14 2020 11:27 PM

கட்சிப் பெயர் இதுதான், சின்னமும் இது தான் - ஆனால் கட்சி ரஜினியுடையதா ? - குழப்பத்தில் ரசிகர்கள் !

Posted Date : Dec 14 2020 11:27 PM

ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் பெயர் “ மக்கள் சேவை கட்சி ” எனவும் , ஆட்டோ சின்னத்தில் தேர்தலில் களமிறங்குகிறார் எனவும் செய்திகள் வரத்தொடங்கிய நிலையில் நடிகர் ரஜினி தரப்பிடமிருந்து எத்தகைய அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் ? என பல்வேறு ஆண்டுகளாக நிலவி வந்த கேள்விக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினி .  உடல்நிலையை காரணமாய் வைத்து அரசியலில் இறங்க தயக்கம் காட்டிவந்த நிலையில் , வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாகவும் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார் . 

அப்போதைய  செய்தியாளர்கள் சந்திப்பிலேயே ஆரம்பிக்கப் போகும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் , தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்துள்ளதாக அறிவித்தார் .

இந்நிலையில் , நேற்று தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத கட்சிக்களுக்கான சின்னத்தை ஒதுக்கீடு செய்தது . அதன் படி பார்கையில் பெயர் குறிப்பிடாத ஒருவர் ‘ மக்கள் சேவை கட்சி ’ என்கிற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் . அந்த கட்சிக்கு பாபா முத்திரையை சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது . ஆதலால் , அது ரஜினியின் கட்சியாகத் தான் இருக்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் . 

ஆனால் , தேர்தல் ஆணையமோ பாபா முத்திரைக்குப் பதிலாக ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது . 234 தொகுதிகளுக்கும் மக்கள் சேவை கட்சி ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது  . 

தற்போது வரை , ரஜினியிடமிருந்தோ அவர் நியமித்த உறுப்பினர்கள் வாயிலாகவோ எத்தகைய அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கட்சியின் பெயரும்  , சின்னம் பற்றிய குழப்பமும் நிலவி வருகிறது ..ரஜினியின் அரசியல் வருகைக்காக இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம் , கட்சியின் பெயரையும் , சின்னத்தையும் பற்றி தெரிந்துக் கொள்ள டிசம்பர் 31 வரை காத்திருக்க மாட்டாமோ ? என்ன ? என ரசிகர்கள் கூறிவருகின்றனர் 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை