December 03, 2021 Friday 10.07 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : Dec 15 2020 12:23 AM

விவசாயியை மீட்ட சீமான் - டார்ச் லைட்டை இழந்த கமல் - குக்கரை காப்பாற்றிய டிடிவி !

Posted Date : Dec 15 2020 12:23 AM

முந்தைய தேர்தலில் போட்டியிட்ட அதை சின்னம் கிடைத்துள்ளதால் சீமான் , டிடிவி ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் , கமலுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது . கூட்டணி பேச்சுவார்த்தை , அரசியல் வருகை , தொகுதி பங்கீடு என களைக்கட்டியுள்ளது தேர்தல் களம் . ஒவ்வொரு கட்சியின் அடையாளமாக விளங்கும் சின்னத்தை பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன . 

சின்னங்கள் என்கிற போது திமுக , அஇஅதிமுக போன்ற பிரதான கட்சிகளுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லை .ஆனால் , இன்னும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சின்னங்களுக்காக ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை அளித்து தங்களுக்கான சின்னத்தை பெற்று வருகின்றனர் . 

இந்நிலையில் , அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் போட்டியிடும் எட்டு கட்சிகளுக்கும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு சின்னமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஒன்பது கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து விவரங்களை தெரிவித்துள்ளது. 

அதில், நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரியில் (Puducherry) ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சிக்கு புதுச்சேரியில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அது எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முந்தைய தேர்தலில் போட்டியிட்ட அதை சின்னம் கிடைத்துள்ளதால் சீமான் , டிடிவி ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் , கமலுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேற்கொண்டு என்ன சின்னம் ஒதுக்கப்படும் என்பது பின்வரும் நாட்களிலே தெரியும் 

நேற்று அறிவிக்கப்பட்ட சின்னம் விவரங்கள்:

தமிழ்நாடு இளைஞர் கட்சி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - மோதிரம்.

அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் (தமிழ்நாடு) - மின் கம்பம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - பிரஷர் குக்கர்

எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி (தமிழ்நாடு) - பேட்டரி டார்ச்

சாமானிய மக்கள் நல கட்சி (தமிழ்நாடு) - கைத்தடி

தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!

தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (மேற்கு வங்கம்) - ஆப்பிள்

நாம் தமிழர் கட்சி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - விவசாயி சின்னம்

மக்கல் சேவை கட்சி (தமிழ்நாடு) - ஆட்டோ ரிக்‌ஷா

மக்கள் நீதி மய்யம் (புதுச்சேரி) - பேட்டரி டார்ச்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை