December 03, 2021 Friday 09.46 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 15 2020 1:06 AM

” நீ இறப்பது தான் சரி : செத்துப் போ ” - சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத் சிறையில் அடைப்பு !

Posted Date : Dec 15 2020 1:06 AM

சின்னத்திரை சித்ராவின் கணவர் ஹேம்நாத் , சித்ரா தற்கொலை குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத் பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. அடுத்த மாதம் அவர்கள் திருமணம் செய்ய இருந்தார்கள். இதற்கிடையே சித்ராவும் ஹேம்நாத்தும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சித்ராவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியாமல் இருந்தது.

 

 

சித்ரா மரணத்திற்கு அவரது கணவர் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பல தரப்பிலும் பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், ஹேம்நாத் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து சித்ராவுக்கு சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை நேற்று இரவு 11 மணியளவில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சந்தேகத்தால் வந்த வீபரிதம் : 

போலீசாரின் விசாரணையில் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, சித்ரா மீது ஹேம்நாத் தனது சந்தேகம் கொண்டுள்ளார். எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய் என்று எல்லாம் அவர் கேள்வி கேட்டு உள்ளார்.அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால், சித்ரா மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

 

 

சம்பவம் நடந்த அன்று கூட, ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஓட்டல் அறையில் இருவருக்கும் கடும் சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது, நீ இறப்பது தான் சரியானது, செத்துப்போ' என்று ஹேம்நாத் கூறியுள்ளதாகவும், இதன் பின்னரே சித்ரா தற்கொலை முடிவு செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹேம்நாத் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரது பெற்றோரிடம் மட்டும் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்த உள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை