December 03, 2021 Friday 10.05 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 16 2020 1:02 AM

வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி : கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக !

Posted Date : Dec 16 2020 1:02 AM

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனை சென்றதாக அவர் கூறினார். அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

 

 

வைரமுத்துக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான நோய் இருந்ததால், தற்போது அவர் அதே பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் வைரமுத்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என்று பதிவிட்டு கவிஞர் வைரமுத்துவை டேக் செய்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை