December 03, 2021 Friday 09.02 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 16 2020 4:45 AM

2021 தேர்தல் : தேமுதிக கட்சிக்கு வாழ்வா ? சாவா ? காரணம் என்ன ?

Posted Date : Dec 16 2020 4:45 AM

திமுக , அதிமுக விற்கு மாற்று கட்சியாக ஒரு காலத்தில் கடும் போட்டியாக நிலவிய தேமுதிக விஜயகாந்தின் உடல்நலத்தால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது .இந்த நிலையில் , வருகிற சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவிற்கு வாழ்வா ? சாவா ? என்கிற நிலை தான் .ஒருவேளை மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டால் அரசியல் கட்சி அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்படும் .

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 

கடந்த 13ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க.வின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 64 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாததால் பேசவில்லை. ஆனால், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

 

வாழ்வா ? சாவா ? :  

"தேமுதிகவிற்கு ஒரு நெருக்கடியான தேர்தல். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியின் அங்கீகாரரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிடும். எனவே தேர்தலில் கூட்டணி சரியான கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, அதிக சீட் வழங்கும் கட்சியுடன்தான் இந்த முறை கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா உறுதி அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 சீட் கேட்டுள்ளது. ஆனால், 10 முதல் 25 சீட் மட்டுமே ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து, தேமுதிக, தனது பார்வையை திமுகவின் பக்கம் செலுத்தியுள்ளது. அங்கு கேட்கும் சீட் கொடுத்தால், திமுக கூட்டணியில் இணையவும் தாயராக உள்ளனர். ஒருவேளை அங்கும் கைவிரிக்கும் பட்சத்தில், மூன்றாவது அணியில் வலுவான கூட்டணியாக களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்த தேமுதிக நிர்வாகிகள் பலர் "தேர்தலில் சீட் வேண்டாம்" என தலைதெறித்து ஓடுகின்றார்களாம். "திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தான் தேர்தலில் வெல்லமுடியும்.மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் 2016 ல் மண்ணை கவ்வியது போல் தான் இந்த முறையும் என புலம்பித் தள்ளியுள்ளனர் . 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை