October 22, 2021 Friday 06.32 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 18 2020 1:44 AM
dmkprotest

வேளாண் மசோதா : தடையை மீறி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் !

Posted Date : Dec 18 2020 1:44 AM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

ஆனா்ல், உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தர மறுத்து விட்டது. ஆனால், தடையைமீறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பேசிய மு.க.ஸ்டலின், வேளாண் சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு அவர்களது கருத்தையும் கேட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அதற்கு மாறாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டியவர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை