September 28, 2021 Tuesday 11.25 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 19 2020 3:21 AM

டார்ச் லைட் சின்னம் எங்களுக்கு தான் வேண்டும்.. உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு !

Posted Date : Dec 19 2020 3:21 AM

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோற்றாலும் அச்சின்னத்தை மக்கள்நீதிமய்யம் ஓரளவுக்கு மக்களிடம் சேர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதே டார்ச் லைட் சின்னம் கிடைக்கும் என அக்கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை.


 
இதனால் கமல்ஹாசன், நிர்வாகிகள், அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. தேர்தல் ஆணையத்திடம் அந்தக் குழு முறையீடு செய்தது.


 
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டார்ஜ் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியும், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அச்சின்னத்தை உபயோகிப்பதை தடுத்தும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை