September 28, 2021 Tuesday 10.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 22 2020 6:02 AM

எல்.கே.ஜி மாணவனுக்கு ரூ.67 ஆயிரம் பீஸ்... மாஸ்டர் பிரிட்டோவின் கிருப..

Posted Date : Dec 22 2020 6:02 AM

மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான சேவியர் பிரிட்டோவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைனில் வழிகளில் கல்வி கட்டணமாக ரூபாய் 67 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சென்னையிலுள்ள வேளச்சேரியில் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனம், சேவை மனப்பான்மையுடன் நடந்து வருவதாக வெளியே காட்டிக் கொண்டு, தற்போது வரை திறக்கப்படாத பள்ளிகளுக்கு இணையதளம் மூலமாக படங்கள் எடுக்கப்படுகிறது என்று பெற்றோர்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்யப்பட்டு தெரியவந்துள்ளது.

வசதி படைத்தவர்கள் இந்த பள்ளியின் கல்வி கட்டணத்தை செலுத்திய நிலையில், தனியார் பள்ளியில் ஆர்வக்கோளாறில் கடன் பெற்று படிக்க வைத்த பல பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர். இதில், கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஆன்லைன் கல்வி சேவையை நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


 
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை விபரீதமானதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் சார்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும், நான்காம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கட்டணம், சிறப்புக் கட்டணம், நோட்டுகள், பாடப் புத்தகம், சீருடை, விளையாட்டு என மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை