September 28, 2021 Tuesday 11.12 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 22 2020 6:04 AM

அரசல், புரசல் அரசியல்: படையெடுத்து வரும் பஞ்சாயத்து!

Posted Date : Dec 22 2020 6:04 AM

தி.மு.க., தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அறிவுரைப்படி, கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை தொகுதிகளின் அடிப்படையில் இரண்டாகவும், மூன்றாகவும் பிரித்துக் கொண்டே போனதால், தி.மு.க.,வில் இப்போது, 77 மாவட்டம் இருக்கிறது. இதனால, உட்கட்சி பிரச்னையும் அதிகமாகி, பஞ்சாயத்து, அறிவாலயம் நோக்கி வந்து கொண்டே இருக்கிறதாம். கிட்டே அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஒருவரால் பஞ்சாயத்து பேசி தீர்க்க முடியாததால, கனிமொழியையும் அமைப்பு செயலாளரா போடப் போறதா அறிவாலயம் வட்டாரத்துல பேச்சு ஓடுது...!சிறுபான்மையினர் ஓட்டுக்கு குறி! பார்லிமெண்ட் தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு, சிறுபான்மையின ஓட்டுக்கள்தான்னு, முதல்வர் நினைக்கிறார்... இந்த முறை சிறுபான்மையின ஓட்டுக்களையும் கவர வேண்டும் என்பதற்காக, கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலர் அன்வர் ராஜாவையும், முன்னாள் எம்.பி., ரபி பெர்னார்டையும் கூப்பிட்டு, முதல்வர் பல மணி நேரம் பேசியுள்ளார். 'சிறுபான்மையின ஓட்டுக்களில் பெரும்பகுதி, இம்முறை, அ.தி.மு.க., கூட்டணிக்கு வரணும்... அதுக்கு தெளிவான திட்டம் போட்டுக் கொடுங்க'ன்னு, அவர்களிடம் முதல்வர் சொல்லியிருக்காராம்...! அமித் ஷாவுக்கு நெருக்கமான அதிகாரிக்கு தமிழகத்தில் முக்கிய பதவி!

தமிழக போலீஸ் அதிகாரியாக இருந்த மிட்டல், சில ஆண்டுகளுக்கு முன், டில்லிக்கு டெபுடேஷனில், மத்திய அரசுப் பணிக்கு சென்றார். பார்லிமெண்ட் பாதுகாப்புப் பணியில் ஏ.டி.ஜி.பி., அந்தஸ்தில் பணியில் இருந்த மிட்டல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானார். சமீபத்தில், டெபுடேஷன் காலம் முடிந்து, அவர் சென்னைக்குத் திரும்பி விட்டார். அவருக்கு உளவுத்துறை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரிவில் முக்கியப் பதவி கொடுக்கப் போறாங்களாம்...!


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை