September 28, 2021 Tuesday 11.25 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 22 2020 11:39 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு புது அறிவிப்பு! தேர்வு எழுத இனி இது கட்டாயம்!

Posted Date : Dec 22 2020 11:39 PM

தமிழக அரசின் ஆட்சிப் பணிகளில் ஒன்றான குரூப்-1 தேர்வு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெருவதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பை பரவியதன் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி காலை நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், https://www.tnpsc.gov.in/, https://tnpscexams.in/ ஆகிய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


 

தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு அல்லது நிரந்தரப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை எனவும் நிரந்தரப் பதிவில் இணைத்துள்ள ஆதார் எண்ணை ஒரு முறை மட்டுமே மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை