#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
பா.ஜ., தான், அ.தி.மு.க.,வின் முதலாளி. அதனால் தான், பா.ஜ., தலைவர் முருகன், 'நாங்கள் தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம்' என்கிறார். இதுவரை எல்லாருக்கும் தெரிந்த, ஆனால், மறைமுகமாக இருந்த விஷயம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.- எம்.பி., கார்த்தி சிதம்பரம்'முதல்வர் வேட்பாளரைத் தானே முடிவு செய்வோம் என்கின்றனர்; முதல்வரை மாற்றுவோம் என சொல்லாதது வரை, சுமுகம் தான்...' என, திருப்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு.தி.மு.க., தன், 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது, மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, அந்த சட்டங்களை ஸ்டாலின் எதிர்க்கிறார்.- தமிழக பா.ஜ., தலைவர் முருகன்'இது தான், உலகம் அறிந்த விஷயமாயிற்றே; அப்போது தேர்தல் வரவில்லை; இப்போது, இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது; அதனால் தான் இந்த எதிர்ப்பு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி.தமிழக சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக, பா.ஜ., விளங்கும் என, அக்கட்சி கூறியுள்ளது. அப்படியானால், தேர்தலில் தனித்து நிற்க வேண்டியது தானே!- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்'அதுபோல, கம்யூ.,க்களும் முயற்சித்துப் பார்த்தால், முன்னுதாரணமாக இருந்தால், பா.ஜ.,வும் பின்பற்றுமே...' என, சொல்லத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் அறிவிக்கிறார். இது, அப்பட்டமான விதிமீறல்.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்'எப்போ, எந்த இடத்தில் அறிவித்தால் என்ன; அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், 2,500 ரூபாய் வந்து சேர்ந்து விடுமே; பொங்கலை கொண்டாடி விடுவரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.ரஜினி, தன் பின் வரவுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தத் தான், 'மாத்துவோம்; எல்லாத்தையும் மாத்துவோம்' என்றார். அவரின் ஆன்மிக அரசியல் பின்னணியை பார்த்தால், அந்த வார்த்தைகள், செயல்பாடுகள் எல்லாம், தி.மு.க.,வுக்கு எதிரானதாகவே இருக்கும்.- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி'அப்போ, தி.மு.க., தலைமையையும் ரஜினி மாத்துவாரா...' என, ஒன்றும் தெரியாதது போல கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவது, கானல் நீர் போன்றது. விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். கமல் ஒரு தெய்வ விரோதி. தி.மு.க.,வில் கூடுதல் தொகுதி பேரம் செய்வதற்காக, ரஜினியுடன் சேர்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.- பா.ஜ., முன்னாள் தேசிய செயலர், எச்.ராஜா'பா.ஜ., தவிர, அனைத்து கட்சிகளும், கட்சித் தலைவர்களும் மோசம் என்கிறீர்களா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை