January 16, 2021 Saturday 05.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 24 2020 4:44 AM

அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !

Posted Date : Dec 24 2020 4:44 AM


தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருக்கிறார்.

இவர்கள் இருவரையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலில் கடுமையாக எதிர்த்து வருகிறார். திரைத்துறையை மட்டுமே காரணம் காட்டி அரசியலுக்கு வரவேண்டாம், மக்களுக்கான திட்டங்கள், போராட்டங்களை இதுவரை முன்னெடுத்துள்ளீர்களா என அவர் கேள்வி எழுப்புகிறார்.


 
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி , கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது .

ரஜினியும் கமலும் எம் . ஜி . ஆர் - யை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவிற்குத்தான் போய் சேரும் . எம் . ஜி . ஆர் . பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் . அதனால் நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றபடி எம் . ஜி . ஆர் . என்ன நல்லாட்சி கொடுத்தார் . கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம் . ஜி . ஆர் . முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம் . ஜி . ஆர் என்று விமர்சித்தார்.
எம்ஜிஆரை விமர்சித்ததற்காக அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 
இதனிடையே, விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக பொங்கி வருகின்றனர். எங்கள் தளபதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கு என பல வசனங்கள் போட்டு மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை