April 12, 2021 Monday 01.20 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 10 2021 12:30 PM

மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.

Posted Date : Jan 10 2021 12:30 PM

   மக்கள் பாதை இயக்கத்தின் தலைவராக விளங்கிய திரு. நாகல்சாமி அவர்கள் இயக்க அற நலன்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் மக்கள் பாதை இயக்கத்திலிருந்து 06.01.2021 அன்று நீக்கப்பட்டு திரு.நாசர் அவர்கள் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மக்கள் பாதை இயக்கத்தில்  வந்த குழப்பங்களுக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. அதன் வழிகாட்டியான திரு.சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கும்,தலைவராக நியமிக்கப்பட்டிருந்த திரு.நாகல் சாமி அவர்களுக்கும் கருத்து மோதல் இருந்ததாக செய்திகள் வலம்வந்தபடி இருந்தது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

மேலும் திரு.நாகல்சாமி அவர்கள் இயக்க நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இயக்க நெறிகளை மீறிய செயலுக்காக அவர் நீக்கப்பட்டு இருப்பதாக மக்கள் பாதை இயக்கத்தின் செயலாளர் திரு.சங்கர் அவர்களும், பொருளாளர் திரு.பிரதாப் பாலச்சந்திரன் அவர்களும் அறிக்கை வெளியீட்டு உள்ளனர். அதில்,இயக்கத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்த முற்பட்டதாகவும்,நிதி மோசடி செய்தவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாகவும்,இயக்க நெறிமுறைகளை மீறிய காரணத்திற்காகவும் அவர் நீக்கப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

பெரும் பரபரப்புக்கு மத்தியில், இந்த புதிய தலைவராக திரு.நாசர் அவர்களை நியமித்தது,இயக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள் பாதையின் அறிக்கை 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை