May 12, 2021 Wednesday 05.14 AM
Newsletter Home

சற்றுமுன்

ஜெரின்
Posted Date : Apr 20 2021 2:47 PM

சின்னக் கலைவாணருக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய குமரி சகாயம் அரசியல் பேரவையினர்

Posted Date : Apr 20 2021 2:47 PM

சின்னக் கலைவாணருக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய குமரி சகாயம் அரசியல் பேரவையினர் 

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக்கொண்டு தனது புரட்சிகர கருத்துக்களை நகைச்சுவையோடு இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தவர் நடிகர் விவேக்.

இவர் தன்னை திரைத்துறையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கனவுத் திட்டமான ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு மரக்கன்று நடுவதன் அவசியத்தை எடுத்துரைத்து அவர்களையும் இப்பணி செய்ய ஊக்குவித்தார். சமீபத்தில் அவர் மரணம் அடைந்த செய்தி அனைத்து தரப்பு மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது அனைவரும் அறிந்தே.

இந்நிலையில் தமிழகத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் குமரிமாவட்ட அரசியல் பேரவையினர் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் விட்டுச்சென்ற உயரிய இலட்சியப் பணியான மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது முதல்கட்டமாக  குருந்தன்கோடு கிராமத்தில் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச்சேர்ந்த  சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்பினர் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற முதியவர் கூறியது, "இன்றைய இளைஞர்கள் மதுவுக்கும், மாதுவுக்கும், பேதைக்கும், போதைக்கும் அடிமையாகும் நிலையில் உங்களை இது போன்ற சமூகப்பணி செய்யும் நிலைக்கு வழிகாட்டி தலைமையேற்று நடத்தும் உயர்ந்த ஆளுமை  ஐயா சகாயம் பேரவையினருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்". 

மேலும் இப்பணி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்த சகாயம் அரசியல் பேரவையினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை