September 28, 2021 Tuesday 09.21 PM
Newsletter Home

சற்றுமுன்

அருள் மைந்தன்
Posted Date : May 13 2021 8:04 PM

சீமான் தகப்பனார் மறைவிற்கு சகாயம் ஐஏஎஸ் (வி.ஓ) இரங்கல்

Posted Date : May 13 2021 8:04 PM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன்(வயது 80) இன்று (13.05.2021) காலமானார். அவருக்கும் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சகோதரர் திரு. சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருத்தமுற்றேன். தந்தையின் இறப்பு என்பது எந்த மகனுக்கும் பெரும் துயரத்தினை அளிக்கும் சோக நிகழ்வு.

இந்த துயர நேரத்தில் திரு. சீமான் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை