#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
சென்னை,
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைதானார். அவர் மீது ஏராளமான மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் மீதும் 26 வயது இளம்பெண் ஒருவர் 7 ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாநகரை சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த 2014-ம் ஆண்டு கெபிராஜ் நடத்திய தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
அப்போது ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். இதற்கு ஒத்துழைக்காததால் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
இது பற்றி அந்த பெண் தற்போது அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கெபிராஜை அதிரடியாக கைது செய்தனர்.
இதேபோல் கெபிராஜ், தான் வேலை பார்த்த பத்ம சேஷாத்ரி பள்ளியிலும் பயிற்சியின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? மற்றும் அவரது பயிற்சி மையத்திலும் பெண்களுக்கு தொல்லை கொடுத்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றிய புகார்களை பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கராத்தே மாஸ்டர் கெபிராஜின் லீலைகள் பற்றிய விவரம் தெரியவரும்.
இதற்கிடையே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கெபிராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை